இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 31 மே 1973 |
இடம் | புது தில்லி, இந்தியா |
பயணிகள் | 58 |
ஊழியர் | 7 |
உயிரிழப்புகள் | 48 |
தப்பியவர்கள் | 17 |
வானூர்தி வகை | போயிங் 737-2ஏ8 |
வானூர்தி பெயர் | சாரங்கா |
இயக்கம் | இந்தியன் ஏர்லைன்சு |
வானூர்தி பதிவு | VT-EAM |
பறப்பு புறப்பாடு | சென்னை விமான நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேருமிடம் | பாலம் விமான நிலையம், புதுதில்லி, இந்தியா |
இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 (Indian Airlines Flight 440) 1973 மே 31 அன்று 65 பேருடன் பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 48 பேர் உயிரிழந்தனர்.
விபத்து
[தொகு]440 விமானம் தமிழ்நாடு, சென்னையில் இருந்து புதுதில்லி நோக்கிச் சென்ற வழமையான பயணிகள் விமானம் ஆகும். போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சாரங்கா எனப் பெயரிடப்பட்டிருந்தது. 1973 மே 31 இல் மாலை 7:15 மணிக்குப் புறப்பட்ட இவ்விமானம் புதுதில்லி பாலம் விமான நிலையத்தை இரவு 9:50 மணியளவில் அண்மித்த போது, அப்பகுதியில் நிலவிய புயல்மழை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் விமானம் உயர் அழுத்தக் கம்பிகளுடன் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பிடித்தது.[1] விமானப் பணியாளர்கள் உட்பட 65 பேர் இவ்விமானத்தில் சென்றனர். இவர்களில் 48 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.[2] விமானத்தில் முன் பக்கத்தில் பயணம் செய்த சிலர் உயிர் தப்பினர்.[3]
இறந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண் அமைச்சர் மோகன் குமாரமங்கலம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே. பாலதண்டாயுதம்[4] உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த நால்வர், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மூவர், யெமனை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். மூன்று அமெரிக்கர்களும், இரண்டு சப்பானியர்களும் உயிர் பிழைத்தவர்களில் அடங்குவர்.[3] ஏழு பணியாளர்களில் ஐவர் உயிரிழந்தனர்.[3]
இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விபத்தை ஆராய்ந்த நிபுணர் குழு விமானத்தை வானூர்தி இறங்கும் பாதைக்குக் கீழே ஓட விட்ட விமான ஓட்டிகளின் தவறே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறிந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aircraft accident Boeing 737-2A8 VT-EAM Delhi-Indira Gandhi International Airport". Archived from the original on 2013-06-20. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.
- ↑ "Airline crash in New Delhi." United Press International (UPI) at Lodi News-Sentinel. Friday June 1, 1973. p. 8 (கூகிள் செய்திகள் p. 5/16), Retrieved on October 28, 2014.
- ↑ 3.0 3.1 3.2 "Indian crash site probed by crews." அசோசியேட்டட் பிரெசு (AP) at the Spokane Daily Chronicle. Friday June 1, 1973. p. 11. Retrieved from கூகிள் செய்திகள் (63/72) on November 28, 2014.
- ↑ மு. நித்தியானந்தன் (14 பெப்ரவரி 2015). "கோகிலம் சுப்பையாவின் எழுத்தும் வாழ்வும்". வீரகேசரி (நாளிதழ்).
- ↑ "Indian Airlines Flight 440 at Airdisaster.com". Archived from the original on 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)